Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2023 18:14:48 Hours

இராணுவத்தின் ஏற்பாட்டில் 300 கிளிநொச்சி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

இராணுவத்தின் வேண்டுகோளின் பேரில் ஹட்டன் நஷனல் வங்கி வழங்கிய அனுசரணையின் மூலம் கிளிநொச்சி கரியலங்நாகபட்டுவான் தமிழ் கலவன் பாடசாலை, அக்கராயகுளம் மகாவித்தியாலயம் மற்றும் செல்லியத்தீவு தமிழ்ப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் 300 ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் இயங்கும் 66 வது காலாட் படைப்பிரிவின் படையினர் அந்தக் குடும்பங்களின் பொருளாதார நெருக்கடிகளை உணர்ந்து மாணவர்களிடையே இந் நன்கொடை திட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு செய்தனர்.

இந் நிகழ்வில் 66 வது காலாட் படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் எச்.பி.டி.ஏ விஜேசேகர அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஏற்பாட்டின் போது பாடசாலைகளுக்கு தேவையான அனைத்து அப்பியாச புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் ஏ-4 தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

66 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் ஆசியுடன் 661 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேஜீஎம்என் செனவிரத்ன யுஎஸ்பீ, 662 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேபீபீ கருணாநாயக்க யுஎஸ்பீ மற்றும் 663 வது காலாட் பிரிகேட் தளபதி கேஏஎன்டீஆர்கே கண்ணங்கர ஆர்எஸ்பீ ஐஜீ ஆகியோர் இந் நிகழ்வுகளுக்கு உதவிகளை வழங்கினார்.

இந் நிகழ்வின் போது ஹட்டன் நஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் திரு.தமித் பல்லேவத்த, ஹட்டன் நஷனல் வங்கி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

11 வது (தொ) கஜபா படையணி, 20 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 5 வது (தொ) இயந்திரவியற் காலாட் படையணி கட்டளை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.