07th August 2023 20:50:54 Hours
பொலன்னறுவை சோமாவதிய ரஜமஹா விகாரையின் வருடாந்த எசலப் பெரஹெர பௌர்ணமி தினமான (ஓகஸ்ட் 01) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் மத்தியில் புனித சோமாவதி விகாரை வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில், 9 வது கள இலங்கை பீரங்கிப் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 9 வது கள இலங்கை பீரங்கிப் படையணியின் படையினர் இந் நிகழ்வில் துப்புரவு மற்றும் ஒளியூட்டல் போன்றவற்றில் தங்களின் பங்களிப்பை வழங்கினர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்வலம், சோமாவதிய விகாரையின் புத்தரின் புனித தந்த தாதுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் பல பாரம்பரிய நடனக் கலைஞர்களின் தீ-நடனங்கள், சாட்டைப் பட்டாசுகள், கண்டிய நடனங்கள் மற்றும் பல இனக்குழு நடனங்களும் இடம்பெற்றன.