Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th February 2023 18:35:24 Hours

இராணுவத்தின் உதவியுடன் சாந்திபுரம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கல்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைப்பிரிவு படையினர் கனடாவைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவருடன் இணைந்து சாந்திபுரத்தின் நீண்டகாலமாக குடிநீர் வசதியின்றி வாழும் 125 குடும்பங்களுக்கு குடிநீரை வழங்கும்பொருட்டு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்தல்.

இத் திட்த்திக்கு கனடாவில் வசிக்கும் வர்த்தகர் திரு கோசல காரியவசம் அவர்கள் தேவையான பண உதவிகளை வழங்கியதுடன் 4 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் முன்னுரிமை அளித்து திட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்றனர்.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க மற்றும் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 543 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் துஷார ஹரஸ்கம மற்றும் 4 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் வை.ஆர் விமலரத்ன ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

புதிதாக நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் செவ்வாய்கிழமை (பெப்ரவரி 14) மன்னார் ஆயர் வண. கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 543 வது காலாட் பிரிகேட் தளபதி, அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.