31st May 2023 20:04:51 Hours
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. பசிந்து குணரத்ன அவர்களின் வேண்டுகோளின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் "'திறன் மேன்பாடு மற்றும் தலைமைத்துவ அபிவிருத்தி" நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு உதவினார். இந்நிகழ்வு கண்டி மாவட்டத்தில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளுக்காக ஏப்ரல் 29 ஆம் திகதி கண்டி மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.
இராணுவத் தளபதி வழங்கிய வழிகாட்டுதலின்படி வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜெயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் நடாத்தினார்.
இப்பயிற்சித் திட்டமானது திறன் மேன்பாடு, தலைமைத்துவ மேன்பாடு', 'பதவி மற்றும் அதிகாரமளித்தல், அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயுமான நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல்', 'நெறிமுறை முகாமை மற்றும் சிறந்த நடைமுறைகளை நிறுவுதல்', தாக்கங்களை அங்கீகரித்தல் போன்ற பயிற்சிகளைக் கொண்டிருந்தது. இளைஞர்களின் சிந்தனை மற்றும் நடத்தையின் ஊக்கத்தின் பங்கு', முதலியன இதன் போது தெளிவு படுத்தப்பட்டன.
தேசிய இளைஞர் சேவைகளின் கண்டி உதவிப் பணிப்பாளர் திரு.சுசிந்தன திஸாநாயக்க இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். கண்டி மாவட்ட செயலாளர் திரு.சந்தன தென்னகோன், மேலதிக மாவட்ட செயலாளர் திரு. உத்பலயரத்ன, உதவி மாவட்ட செயலாளர் திருமதி. சந்தமாலி, கல்ப் லங்கா ஏஜென்சியின் தலைவர் திரு.ஏ.எம்.ரபீகாந்த், கல்ப் லங்கா ஏஜென்சி மாவட்ட முகாமையாளர் திரு. நஷான் ஆகியோரும் கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.