19th May 2023 19:33:58 Hours
ரத்னகிரிய மைதானத்தில் மாதம்பை தும்மலசூரிய விக்ரி விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 11 வது 'மங்கள நிஷாந்த' ஞாபகார்த்த எல்லை சுற்றுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை மே (14) இடம் பெற்றது. இப்போட்டியில் இலங்கை இராணுவ எல்லை அணி உட்பட ஆறு அணிகள் கலந்து கொண்டன.
முதலாம் சுற்றுப் போட்டியில் இலங்கை இராணுவ எல்லை அணி, பதுரகொட எக்சத் விளையாட்டுக் கழக எல்லை அணி மற்றும் கணேமுல்ல வாசனா விளையாட்டுக் கழக அணிகளுடன் போட்டியிட்டு, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
பதுரகொட எக்சத் விளையாட்டுக் கழகம் மற்றும் கனேமுல்ல வாசனா விளையாட்டுக் கழகம் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியதுடன், பதுரகொட எக்சத் விளையாட்டுக் கழகம் 25 பந்துகளில் 05 ஓட்டங்களையும், கணேமுல்ல வாசனா விளையாட்டுக் கழகம் 11 பந்துகளில் 06 ஓட்டங்களையும் பெற்று இராணுவ அணியுடனான எதிரான இறுதிப் போட்டிக்கு கணேமுல்ல வாசனா விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றது.
இராணுவ எல்லை அணி 30 பந்துகளில் 10 ஓட்டங்களை பெற்றதுடன், கணேமுல்ல வாசனா கழக அணியால் 24 பந்துகளில் 03 ஓட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது. 11 வது மங்கள நிஷாந்த ஞாபகார்த்த எல்லை போட்டியில் கணேமுல்ல வாசனா கழக அணியை தோற்கடித்து, இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ அணி வெற்றி பெற்றது.
இலங்கை இராணுவ எல்லை அணி எதிரணிகளை ஒற்றை இலக்க ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தி, சிறந்த துடுப்பாட்டத்தை காட்டி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றது.
போட்டியின் முடிவில் இலங்கை இராணுவ எல்லை அணிக்கு பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டன:
சிறந்த துடுப்பாட்ட வீரர் : சிப்பாய் கேஏஆர்பீகே பெரேரா
சிறந்த களத்தடுப்பு வீரர் : சிப்பாய் கேஎச் சதுரங்க
சிறந்த ஓட்ட வீரர் : சிப்பாய் டபிள்யூஎம்என் சமீர