19th August 2023 20:41:53 Hours
2023 ஓகஸ்ட் 10 ஆம் திகதி இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பத்து அதிகாரிகள் மற்றும் இருபத்தி ஆறு சிப்பாய்கள் கிரிஷ்அமன் II 2023 களப் பயிற்சியில் பங்கேற்பதற்காக மலேசியாவிற்குப் புறப்பட்டனர்.
21 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 887 இராணுவப் பங்கேற்பாளர்கள் களப் பயிற்சியில் பங்கேற்கின்றதுடன் இது முக்கியமாக அமைதி காக்கும் நடவடிக்கைகளில் அமைதி காக்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி ‘கிரிஷ்அமன் II 2023’ என்பது அமெரிக்காவின் உலகளாவிய அமைதி நடவடிக்கைகளின் முன்முயற்சி திட்டத்தின் கீழ் மலேசியாவின் ஆயுதப் படைகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் இந்து-பசிபிக் கட்டளை ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பாகும், இது 2023 ஓகஸ்ட் 12 முதல் 26 வரை மலேசியாவில் உள்ள போர்ட் டிக்சன் பகுதி, நெகிரி செம்பிலானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் இராணுவ உறுப்பினர்களுக்கு உலகெங்கிலும் உள்ள ஐக்கிய நாடுகளின் பணிகளில் சேர்வதற்கான அவர்களின் திறன்களை கூர்மைப்படுத்துவதற்கும், அனைத்து பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளுடனும் பல தேசிய செயல்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.