Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2023 17:22:02 Hours

இராணுவத் தளபதியுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி 'அபிமன்சல-2' போர் வீரர்களை சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர், மே 2009 க்கு முன்னர் தாய்நாட்டிற்காக அங்கவீனமடைந்த போர் வீரர்களை கம்புருப்பிட்டிய 'அபிமன்சல - 02' விடுதிக்கு சனிக்கிழமை (மே 27) பார்வையிடச் சென்றதுடன், நல விடுதியில் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பெற்று வரும் போர் வீரர்களுடன் சில மணி நேரம் செலவிட்டு நலம் விசாரித்தனர்.

இராணுவத் தளபதியை 'அபிமன்சல - 2' விடுதியின் தளபதி கேணல் ஜிஜிஆர் மதுகொட யூஎஸ்பீ, அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோர் வளாகத்தைச் சுற்றி பார்வையிட்டதுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அங்கு வசிக்கும் போர் வீரர்களுடன் அவர்களின் பயிற்சி நடைமுறைகள், தினசரி வேலைத்திட்டங்கள் மற்றும் கல்வித் திட்டங்கள் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டதுடன், அவர்களுக்கு பரிசுப் பொதிகளையும் வழங்கிவைத்தார்.

இராணுவத் தளபதி அங்கு வசிக்கும் போர் வீரர்கள் மற்றும் அனைத்து அழைப்பாளர்களுடன் மதிய உணவில் கலந்து கொண்டதுடன், நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினர்.

வருகை தந்த இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியால் நீச்சல் தாடகத்தை சுத்தம் செய்யும் குளோரின் வழங்கப்பட்டதுடன், திருமதி ஜானகி லியனகே அவர்களுக்கு போர்வீரர்களால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த புனர்வாழ்வு நிலையத்திற்கு இராணுவத் தளபதி முதல் முறையாக வருகை தந்ததுடன், நலன்புரி விடுதி சிறப்பாகச் செயற்படுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் இராணுவத் தளபதி 'அபிமன்சல - 2' னால் தளபதிக்கு பாராட்டுச் சின்னமும் வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் நிகழ்ச்சி முடிவில் அதிதி பதிவேட்டில் தனது குறிப்புகளையும் பதிவிட்டனர். இராணுவத் தளபதி அவர் புறப்படுவதற்கு முன்னர், போர் வீரர்களுடன் இணைந்து, வளாகத்தில் மரக்கன்றினையும் நாட்டியதுடன், குழுப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

நிகழ்வில் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ, புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்சி ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.