27th December 2023 19:33:21 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவு இராணுவத் தலைமையகத்தில் பணிபுரியும் தெரிவு செய்யப்பட்ட படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகளை திங்கட்கிழமை (டிசம்பர் 11) இராணுவ சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் தலைமையில் வழங்கியது.
இந்தத் திட்டத்தின் நோக்கம், படையினர் மற்றும் சிவில் ஊழியர்களால் அனுபவிக்கப்படும் பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பதாகும்.
திருமதி ஜானகி லியனகே அவர்கள் அந்த நிவாரணப் பொதிகளை தெரிவு செய்யப்பட்ட பெறுநர்களுக்கு வழங்கினார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.