Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2023 23:06:08 Hours

இராணுவ விளையாட்டு வீரர்கள் புதிய தேசிய சாதனைகள் படைப்பு

தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 58 வது இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் நாளான வியாழன் (30) இன்று நடைபெற்ற கோலூன்றி பாய்தல், வேக நடை (10000 மீ) (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள்) ஆகியவற்றில் இராணுவ வீரர்கள் 3 தேசிய சாதனைகளை படைத்துள்ளனர்.

அந்த தேசிய சாதனைகளின் சாதனையாளர்கள் பின்வருமாறு:

கோலூன்றி பாய்தல் (ஆண்கள்) - இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்எஸ்ஈ ஜனித் (5.16 மீ)

10000 மீ. வேக நடை (ஆண்கள்) - கஜபா படையணியின் லான்ஸ் கோப்ரல் பீஎச்எஸ்என் பெர்னாண்டோ (நேரம் 45.12.22)

10000 மீ. வேக நடை (பெண்கள்) - இலங்கை இராணுவ மகளிர் படையணியின் லான்ஸ் கோப்ரல் யு.வி.கே மாதிரிகா (நேரம் 49.25.97)