Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2024 20:13:51 Hours

இராணுவ விளையாட்டு கழகம் மேஜர் கழக மகளிர் கிண்ண கிரிக்கெட் போட்டி – 2024 இல் இரண்டாமிடம்

இலங்கை கிரிக்கெடினால் நடாத்தப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான மேஜர் கழக மகளிர் கிண்ண கிரிக்கெட் போட்டி கொழும்பு கோட்ஸ் மைதானத்தில் 24 நவம்பர் 2024 அன்று நடைபெற்றது.

15 அணிகளுக்கிடையில் போட்டியிட்ட இராணுவ விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன் அரையிறுதியில் விமானப்படை விளையாட்டு கழகத்தை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சிலாபம் எம்.சி.சி 205/7 ரன்களை எடுத்தது, இராணுவ விளையாட்டுக் கழகம் 115 ரன்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

393 ஓட்டங்களைப் பெற்று இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய சார்ஜன் என்.என்.டி சில்வா போட்டி தொடரின் சிறந்த வீராங்கணையாக தெரிவு செய்யப்பட்டார்.