25th July 2023 21:02:45 Hours
சமூக அபிவிருத்தி மற்றும் விளையாட்டு மைதான பாவனையாளர்களின் நலனுக்காக கொஸ்கம இராணுவ வழங்கல் கட்டளைத் தலைமையக சிப்பாய்கள் இராணுவ வழங்கல் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சிஎல்சி அவர்களின் வழிகாட்டுதலின்படி, 'சேவாபியச' விளையாட்டு மைதானத்தை செவ்வாய்கிழமை (ஜூலை 18) சுத்தம் செய்தனர்.
அப்பகுதியில் உள்ள ஆர்வமுள்ள பொதுமக்களும் இந்த சிரமதான பணியில் பங்கு பற்றினர். அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பிள்ளைகளால் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த மைதானம் வழங்கல் கட்டளை படையினரால் சுத்தம் செய்யப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டன.