24th October 2023 10:21:49 Hours
இராணுவ ரக்பி வீரர்களுக்கான நான்கு நாள் தலைமைத்துவ பயிற்சி பட்டறை குடாஓயாவில் உள்ள கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையில் ஆரம்பமானது. இப் பயிற்சி இராணுவ ரக்பி குழு தலைவரும் பொதுபணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்களின் பரிந்துரைகமைய ஒக்டோபர் 15-18 வரை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நான்கு நாள் செயற்திட்டத்தின் போது, இராணுவ ரக்பி குழுவின் செயலாளர் பிரிகேடியர் எல்.டபிள்யூ.எஸ்.ஆர். வெத்தசிங்க அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் குழு நிர்வாகம், தலைமைத்துவம் மற்றும் சாகச பயிற்சி நடைமுறைகளில் ஈடுபடுவதற்கு பங்கேற்பாளர்களுக்கு பெறுமதியான வாய்ப்பு கிடைத்தது.
கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையின் அங்கத்தவர்கள் இந்தப் பயிற்சி வெற்றியடைவதற்கு தளராத ஆதரவை வழங்கினர்.
இந்த பயிற்சி அமர்வில் தலைமைப் பயிற்றுவிப்பாளர் திரு.ஷாமிலி அப்ராஸ் நவாஸ் மற்றும் இலங்கை ரக்பி சம்மேளனத்தின் உதவிப் பயிற்றுவிப்பாளர் திரு.திலான் தனுஷ்க சொய்சா ஆகியோரின் தீவிர ஈடுபாடும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ச்சியான சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் மூலம், வீரர்களின் மன மற்றும் உடல் தகுதி கணிசமாக மேம்படுத்தப்பட்டது. இளம் ரக்பி வீரர்களுக்கு சவாலான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறன் மற்றும் தன்னம்பிக்கையை அளித்ததுள்ளது. இந்த நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்கள் எதிர்கால கழகங்களுக்கிடையேயான ரக்பி போட்டிகளில் போட்டியிட எதிர்பார்த்திருப்பதால், இந்த பயிற்சி சந்தேகத்திற்கு இடமின்றி விலைமதிப்பற்றதாக இருக்கும்.