15th July 2024 13:12:19 Hours
இராணுவ கோல்ப் குழுவினரால் 2024 ஜூலை 09 முதல் 11 வரை புத்தல இராணுவப் போர்க் கல்லூரியில் மாணவ அதிகாரிகளுக்கான சிறப்பு கோல்ப் பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியானது கோல்ப் விளையாட்டில் அதிகாரிகளின் ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக இராணுவத் தளபதியின் கட்டளையுடன் முன்னெடுக்கப்பட்டது.
நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும், இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ கோல்ப் தலைவருமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அவுஸ்திரேலியா மற்றும் சம்பியாவைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவ அதிகாரிகள் உட்பட 116 அதிகாரிகளின் பங்கேற்புடன் மூன்று நாள் பயிற்சி நடத்தப்பட்டது.