05th March 2024 14:36:54 Hours
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் 02 மார்ச் 2024 அன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு இலங்கை இராணுவ மகளிர் படையணி படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியுபீஎஸ்சீ ஐஜி அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
திறப்பு நிகழ்வினை தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ மகளிர் படையணி விளையாட்டுப் வீராங்கனைகளுக்கு படைத்தளபதி பரிசுப்பொதிகளை வழங்கினார். இவ்விழாவில் விளையாட்டு பணிப்பகத்தினால் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் இருபத்தி ஏழு படையினருக்கு பண பரிசு வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.