28th June 2023 22:08:57 Hours
இராணுவப் போர்க் கல்லூரியின் கல்வி தவணையினை நிறைவு செய்து மாணவ அதிகாரிகளுக்கு ஓய்வு வழங்கும் பொருட்டு நடாத்தப்படும் ஹாஷ் ரன் நிகழ்வின் 2023ம் ஆண்டிக்கான இராண்டாம் கட்டம் 2023 ஜூன் 24 திகதி இடம்பெற்றது.
சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி 8, கனிஷ்ட கட்டளைப் பாடநெறி 27 மற்றும் கனிஷ்ட பணிநிலை பாடநெறி 24 ஆகியவற்றின் மாணவ அதிகாரிகளுடன் பாடசாலை தளபதி, தலைமைப் பயிற்றுவிப்பாளர், அனைத்து பயிற்றுவிப்பாளர் மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் இந் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இராணுவ போர்கல்லூரியின் தளபதி பிரிகேடியர் யுகேடிடிபீ உடுகம ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களினால் கொடி அசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
1930 பிற்பகுதியில் தொடங்கப்பட்ட ‘டிரிங்க்கிங் கிளப் வித் ரன்னிங் ப்ராப்ளம்’ (பிரச்சினைகளுடன் ஓடும் குடிக்கழகம்) என்று நகைச்சுவையாக அழைக்கப்படும் ‘ஹாஷ் ரன்’ இப்போது போட்டியற்ற ஓட்ட நிகழ்வாக மாறியுள்ளது. இந்த பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்து, இராணுவ போர் கல்லூரி 'ஹாஷ் ரன்' பாதையில் சாகச ஓட்டம், தடைகளை கடப்பது மற்றும் குறுக்கு பாதையேன 12 கி.மீ கொண்டது. இதன் போது கிராமிய உணவு மற்றும் பானங்களுடன் வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியையும் அனுபவிப்பதற்கு முடியும்.
ஓட்டம் நிறைவடைந்ததும் அனைத்து வீரர்களும் கல்லூரியின் திறந்தவெளி அரங்கப் பகுதியில் ஒன்றுகூடி பாட்டுபாடி நடனமாடி சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர்.