03rd June 2023 00:14:53 Hours
27 வது கனிஷ்ட கட்டளை பாடநெறி குழு 02 திங்கட்கிழமை (மே 29) புத்தல இராணுவ போர் கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சாம்பியனானது.
பதவி நிலை அதிகாரிகள் அணி, சிரேஷ்ட கட்டளை பாடநெறி 08 இலிருந்து இரண்டு அணிகள், கனிஷ்ட கட்டளை பாடநெறி 27 இலிருந்து ஐந்து அணிகள் மற்றும் கனிஷ்ட பணிநிலை பாடநெறி 24 இலிருந்து இரண்டு அணிகள் போட்டியில் பங்கு பற்றின. கனிஷ்ட கட்டளை பாடநெறி 27 இன் 02 அணி மற்றும் பதவி நிலை அதிகாரிகள் அணி 01 ஆகியவை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. பதவி நிலை அதிகாரிகள் அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றதுடன், கனிஷ்ட கட்டளை பாடநெறி அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று சாம்பியன்ஷிப்பைத் வென்றது.
பதவி நிலை அதிகாரிகள் அணியில் மேஜர் விஎம் ஹப்புஆராச்சி அவர்கள் போட்டியில் 47 ஓட்டங்களைப் பெற்று அதிகபட்ச தனிப்பட்ட ஓட்டங்களைப் பதிவு செய்ததுடன், பதவி நிலை அதிகாரிகள் அணியின் மேஜர் கேஜிஜி குணரத்ன அவர்கள் தனது சிறந்த சகலதுறை ஆட்டத்தால் தொடர் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை கனிஷ்ட கட்டளை பாடநெறி அணியின் மேஜர் எச்பீஎம்பிஎம் பளிஹக்கார அவர்களும், போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராகவும் கனிஷ்ட கட்டளை பாடநெறி அணியின் மேஜர் பீஎம்எஸ்வை பெர்னாண்டோ அவர்களும் தெரிவானார்கள்.
இந்நிகழ்வில் இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபீஎம் யாம்பத் ஆர்பிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, சாதனையாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களையும் விருதுகளையும், தலைமைப் பயிற்றுவிப்பாளர் மற்றும் இராணுவப் போர்க் கல்லூரியின் நிரந்தரப் பணியாளர்களுடன் இணைந்து வழங்கினார்.
போட்டியின் நிறைவில் மாணவர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளும் காணப்பட்டன.