17th June 2023 20:46:29 Hours
ஒழுக்க பராமரிப்பு பணிப்பாளர் நாயகமும் இலங்கை பொலிஸ் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யுஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களின் ஆலோசனையின் பேரில் புதன்கிழமை (ஜூன் 14) நாரஹேன்பிட்டியில் உள்ள இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி தலைமையகத்தில் யோகாசன பயிற்சி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த யோகாசன பயிற்சி அமர்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பணியாளர்களின் மன மற்றும் உடல் திறன் மற்றும் ஆன்மீகத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 140க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
தகுதிவாய்ந்த யோகாசன பயிற்றுவிப்பாளரான பொறியியல் சேவைப் படையணியை சேர்ந்த அதிகாரவாணையற்ற அதிகாரி I டப்ளியுபீஎஸ் விக்ரமநாயக்க இந்தப் பயிற்சி அமர்வை நடத்தினார்.