21st August 2023 22:38:58 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் விசேட புலனாய்வுப் பிரிவின் சுற்றாடல் சம்பந்தப்பட்ட படையினர் வெள்ளிக்கிழமை (18 ஓகஸ்ட் 2023) 100க்கும் மேற்பட்ட சிப்பாய்களின் பங்கேற்புடன் வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் சிரமதானப்பணியை மேற்கொண்டனர்.
இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களின் ஆசியில் இத் திட்டம் நடைபெற்றது.
சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேணல் எம்எம்எம்பீ மகேஷ் குமார அவர்களின் மேற்பார்வையில் இத் திட்டம் நடைபெற்றது.