Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd April 2024 16:31:22 Hours

இராணுவ பொறியியல் சேவைகள் படையணி படையலகுகளுக்கிடையிலான அணிநடை போட்டி

இராணுவ பொறியியல் சேவைகள் படையணி படைத் தளபதியும் நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படையலகுகளுக்கிடையிலான அணிநடை போட்டி 2024 மார்ச் 14 மற்றும்15 ம் திகதிகளில் நடைப்பெற்றது.

கடும்போட்டியின் பின்னர் இப்போட்டியில் 12 வது (தொ) இராணுவ பொறியியல் சேவைகள் படையணி முதலிடத்தினை பெற்றுக்கொண்டது. 3 வது இராணுவ பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 4 (தொ) வது இராணுவ பொறியியல் சேவைகள் படையணி முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டன.

போட்டியின் பெறுபேறுகள்:

• சிறந்த கட்டளையாளர்: 12 வது (தொ) இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் கெப்டன் ஏகேஎன் மியூஷன்

• சிறந்த அணிநடை பயிற்றுவிப்பாளர்: 12 வது (தொ) இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் பணிநிலை சார்ஜன் எம்கேஎன் அல்லவல

• சிறந்த மார்க்கர்: 03 வது இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் சிப்பாய் ஜேகேஎம்எம்வீஎஸ் ஜயசிங்க

பரிசளிப்பு விழாவில் இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படைத்தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் படையலகுகளுக்கிடையிலான அணிநடை போட்டியைக் கண்டுகளித்தனர்.