01st March 2024 15:00:50 Hours
புனர்வாழ்வு மற்றும் சிகிச்சைபெறும் போர்வீரர்களின் நலன் விசாரிக்கும் நோக்கில் இராணுவ பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், பாங்கொல்ல ‘அபிமன்சல- 3 நல விடுதிக்கு 2024 பெப்ரவரி 21 ம் திகதி விஜயம் செய்தனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் வழிகாட்டுதலின்படி இராணுவ பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுரங்கி அமரபாலவின் மேற்பார்வையின் கீழ் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது மத அனுஷ்டானங்களுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு ‘விளக்கு தொகுதிகளை வளாகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
போர்வீரர்கள் மற்றும் விருந்தினர்கள் தேநீர் விருந்தில் கலந்துகொண்டதுடன், தாங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர், மேலும் விடைப்பெறுவதற்கு முன் குழு படம் எடுத்துகொண்டதுடன் இராணுவ பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி அதிதிகள் பதிவேட்டில் சில பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவ பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.