Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd January 2024 16:50:51 Hours

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் கம்புருப்பிட்டிய போர்வீரர்களை சந்திப்பு

இராணுவ புலனாய்வு படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி திலுபா பீரிஸ் அவர்கள் 2024 ஜனவரி 17 ம் திகதி கம்புருப்பிட்டி 'அபிமன்சல-02' நல விடுதிக்கு விஜயம் செய்து போர் வீரர்களை சந்தித்து நலன் மற்றும் அவர்களின் முன்னேற்றம் குறித்து விசாரித்தார்.

இந்த விஜயத்தின் போது இராணுவ புலனாய்வு படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி இராணுவ புலனாய்வு படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன இணைந்து போர் வீரர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினர். சில அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் நிகழ்ச்சியில் இணைந்துக் கொண்டனர்.