07th February 2024 15:29:13 Hours
இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவு இராணுவப் புலனாய்வுப் படையணியில் சேவையாற்றி மறைந்த போர்வீரர்களின் ஆதரவற்ற 65 குடும்பங்களுக்கு தமது உதவிகளை வழங்கியது. இராணுவப் புலனாய்வுப் படையணியின் 31 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கரந்தெனிய படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் தெரிவு செய்யப்பட்ட 65 குடும்பங்களுக்கு தலா ரூ. 7500/= மதிப்புள்ள பரிசு வவுச்சர்களை அவர்களின் நிதிச் சுமைகளை குறைப்பதை நோக்கமாகக் கொணடு வழங்கப்பட்டது. இராணுவ புலனாய்வு படையணி படையினரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு தலா ரூ.5000/= நன்கொடையாக வழங்கப்பட்டது. இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் இந்த மாதாந்த நன்கொடை ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படும்.
இராணுவத்தின் பதவி நிலை பிரதானியும் இராணுவ புலனாய்வு படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி திலுபா பீரிஸ், இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.