24th July 2023 19:30:30 Hours
இராணுவத் தலைமையகத்தில் உள்ள பயிற்சி பணிப்பகம், நாடளாவிய ரீதியில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலைகளில் சேவையாற்றும் இராணுவப் பயிற்றுவிப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை ஜூலை 19-21 வரையான திகதிகளில் பனாகொடை இலங்கை சமிக்ஞைப் படையணியில் ஏற்பாடு செய்திருந்தது.
12 இராணுவ பயிற்சி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஓர் அதிகாரி மற்றும் 33 சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கு பற்றியதுடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பயிற்றுவிப்பாளர்கள், ஆராய்ச்சி பகுப்பாய்வு மற்றும் கோட்பாட்டிற்கான பணிப்பகத்தின் ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் மேம்பாட்டு பிரிவின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இலங்கை சமிக்ஞை படையணி பயிற்றுனர்கள் இணைந்து அமர்வுகளை நடாத்தினர்.
பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீகேஎஸ் நந்தன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் கருத்தியலின்படி இந்த அமர்வு நடாத்தப்பட்டது. பயிலரங்கின் போது, பயிற்சி முறைமைகளை பயன்படுத்தி பயிற்சியின் செயல்பாடு, பராமரிப்பு மற்றும் நடத்துதல் குறித்து பங்கேற்பாளர்கள் அறிவூட்டப்பட்டன.