05th August 2024 17:20:10 Hours
கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வன போர் அதிகாரிகள் பாடநெறி எண். 34, கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் வன போர் (சிப்பாய்கள்) பாடநெறி எண். 37 மற்றும் விசேட காலாட்படை நடவடிக்கைகள் பாடநெறி எண். 75 ஆகியவற்றின் விடுக்கை அணிவகுப்பு 56 அதிகாரிகள் மற்றும் 246 சிப்பாய்களின் பங்குபற்றலுடன் 2024 ஜூலை 31 மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அணிவகுப்பை நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் பிரதம விருந்தினர், சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, பாடநெறியில் பங்குபற்றியவர்களுக்கு சின்னங்களை வழங்கினார்.
பின்வரும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விடுக்கை அணிவகுப்பின் போது சிறப்பு விருதுகளைப் பெற்றனர்:
கிளர்ச்சி எதிர்ப்பு (அதிகாரிகள்) பாடநெறி எண். 34:
சிறந்த மாணவ அதிகாரி – கெப்டன் எச்.ஐ. ஜயவிலால் இயந்திரவியல் காலாட் படையணி
கிளர்ச்சி எதிர்ப்பு (சிப்பாய்கள்) பாடநெறி எண். 37:
சிறந்த மாணவர் - கோப்ரல் டி.எம். நவரத்ன 2 வது விசேட படையணி
விசேட காலாட்படை நடவடிக்கைகள் பாடநெறி. 75:
சிறந்த உடற் தகுதி வீரர் - லான்ஸ் கோப்ரல் ஏ.ஜி.சி.எல். வீரசிங்க 8 வது கஜபா படையணி
சிறந்த துப்பாக்கி சூட்டு வீரர் - லெப்டினன் வை.ஜி.டி. திலகரத்ன கஜபா படையணி
சிறந்த மாணவர் விருது (சிப்பாய்) - கோப்ரல் டி.எம்.ஐ. திசாநாயக்க, 8வது படையலகு கஜபா படையணி
சிறந்த மாணவர் அதிகாரி – லெப்டினன் டபிள்யூ.ஐ.யு. வர்ணசூரிய விஜயபாகு காலாட்படையணி
சிறந்த பிரிவு - 1வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி