Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2023 18:46:11 Hours

இராணுவ படையினரால் கெரண்டி எல்ல மலையில் வழிதவறிய 33 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 111 வது காலாட் பிரிகேடின் 1 வது இலங்கை ரைபிள் படையினர் உடுதும்பரை சுற்றுலாத்தலமான உடுதும்பர கெரண்டி எல்ல சுற்றுலாத்தலத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 19) வழிதவறிய 33 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளைக் பாதுகாப்பாக மீட்டனர்.அந்த சுற்றுலாப் பயணிகள் முந்தைய நாள் (பெப்ரவரி 18) காலை கரண்டிஎல்ல, உடுதும்பர மலைத்தொடருக்குப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது ஆனால் இருண்ட வானிலை மற்றும் கனமழை காரணமாக அவர்கள் திட்டமிட்டபடி மலையிலிருந்து இறங்கத் தவறிவிட்டனர். இதனால் அவர்கள் எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் சிக்கித் தவித்தனர்.

அவர்களின் இக்கட்டான நிலை குறித்து தெரிவிக்கப்பட்டதையடுத்து 1 வது இலங்கை ரைபிள் படையணியை சேர்ந்த இராணுவ படையினர் குழுவும், அவர்களின் கட்டளை அதிகாரியும் இணைந்து உடனடியாக அவ் இடத்திற்குச் சென்று அந்தக் குழுவை பத்திரமாக மீட்டனர். உடுதும்பர பொலிஸ் அதிகாரிகளும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவு அளித்தனர்.111 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க அவர்கள் மீட்பு பணியை உன்னிப்பாகக் கண்காணித்து மலை உச்சியில் இருந்து பாதுகாப்பான இடத்துக்குத் திரும்ப அவர்களை வழிநடத்தினார். உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.