17th January 2025 19:04:12 Hours
இராணுவ படையணிகளுக்கு இடையிலான கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி 2025 ஜனவரி 15, அன்று நுவரெலியா கோல்ப் கழகத்தில் நிறைவடைந்தது. இரண்டு நாட்களில், 12 வெவ்வேறு படையணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் அபார திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தினர்.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் தளபதியும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் மற்றும் இலங்கை இராணுவ கோல்ப் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தொடர்ச்சியான போட்டிகளுக்குப் பின்னர், திறந்த ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் கெமுனு ஹேவா படையணி அணி சாம்பியனானதுடன், இலங்கை பொறியியில் படையணி இரண்டாம் இடத்தைப் தனதாக்கி கொண்டது. அதே நேரத்தில் திறந்த மகளிர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் அணி சம்பியனானதுடன், இலங்கை பொறியியல் படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இலங்கை இராணுவ கோல்ப் குழுவின் பிரதித் தலைவர் பிரிகேடியர் டிடிபீ சிறிவர்தன பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.
இறுதி வெற்றியாளர்கள்
திறந்த தனிநபர் போட்டி
1. லான்ஸ் கோப்ரல் கே.எல்.ஜி குமார - இலங்கை சமிக்ஞை படையணி
2. லான்ஸ் கோப்ரல் பீஜீசீ சுபுன் உதார - இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி
3. காலாட் சிப்பாய் வீடபிள்யூஎச்எஸ் குமார - விஜயபாகு காலாட் படையணி
புதிய தனிநபர் போட்டி
1. காலாட் சிப்பாய் கேஎல்எம்எஸ் குருப்பு - விஜயபாகு காலாட் படையணி
2. காலாட் சிப்பாய் எல்டிஎச் சமரஜீவ - விஜயபாகு காலாட் படையணி
3. கோப்ரல் வைஜீயூ புஷ்பகுமார – இயந்திரவியல் காலாட் படையணி
திறந்த குழு
1. கெமுனு ஹேவா படையணி
2. இலங்கை பொறியியல் படையணி
3. இலங்கை சிங்க படையணி
பெண்கள் குழு
1.இலங்கை இராணுவ மகளிர் படையணி
2. இலங்கை பொறியியல் படையணி
3. இலங்கை சமிக்ஞை படையணி