Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th October 2024 17:50:26 Hours

இராணுவ படையணிகளுக்கிடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி - 2024

இராணுவ படையணிகளுக்கிடையிலான ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 07 ஒக்டோபர் 2024 அன்று பனாகொடை ஸ்குவாஷ் மைதானத்தில் நிறைவடைந்தது. 13 வெவ்வேறு படையணிகளை சேர்ந்த வீரர்கள், சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக 12 போட்டிகளில் பங்கேற்று தங்களது சிறப்பான திறன்களை வெளிப்படுத்தினர்.

இலங்கை இராணுவ தொண்டர் படை மற்றும் இலங்கை இராணுவ ஸ்குவாஷ் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

கடுமையான போட்டிகளுக்கு பின்னர் ஆண்கள் பிரிவில் கஜபா படையணி சாம்பியன் பட்டத்தினை வென்றதுடன் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி வீரர்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டனர். பெண்கள் பிரிவில், இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தினை வென்றதுடன் இலங்கை இராணுவ மருத்துவப் படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

விருது வழங்கள் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.

போட்டிமுடிவுகள் பின்வருமாறு:

ஆண்கள் புதியவர்கள்

-முதலாமிடம் :– கன்னர் எஸ்எம்டிஎல் சுரவீர இலங்கை இராணுவ பீரங்கி படையணி

-இரண்டாமிடம் :- கோப்ரல் டபிள்யூ.ஜி.ஆர்.எல் சந்தரூவன் விஜயபாகு காலாட் படையணி

பெண்கள் புதியவர்கள்

-முதலாமிடம் :– சிப்பாய் எம்.எம் பிரபோதினி இலங்கை பொறியியல் படையணி

-இரண்டாமிடம் :– சிப்பாய் ஜே.கே.ஆர் சமந்திகா இலங்கை பொறியியல் படையணி

அதிகாரிகள் திறந்த பிரிவு

-முதலாமிடம் :– கெப்டன் எல்இஎஸ் லியனகே இலங்கை பொறியியல் படையணி

-இரண்டாமிடம் :– கெப்டன் ஜேஏ கருணாரத்ன யுஎஸ்பீ விஜபாகு காலாட் படையணி

பெண் அதிகாரிகள் திறந்த பிரிவு

-முதலாமிடம் :– கெப்டன் எச் எம் அபேரத்ன இலங்கை இராணுவ பொது சேவை படையணி

-இரண்டாமிடம் :– பெண் பயிலிளவல் அதிகாரி எம் ஜீ அபேரத்ன

ஆண் திறந்த பிரிவு

-முதலாமிடம் :– லான்ஸ் கோப்ரல் எஸ்என் டேனியல் கஜபா படையணி

-இரண்டாமிடம் :– லான்ஸ் கோப்ரல் ஆர் எம்எஸ்எல் கே ஏக்கநாயக்க தேசிய பாதுகாவலர் படையணி

பெண் அதிகாரிகள் திறந்த பிரிவு

-முதலாமிடம் :– கெப்டன் எச் எம் அபேரத்ன இலங்கை இராணுவ பொது சேவை படையணி

-இரண்டாமிடம் :– பெண் பயிலிளவல் அதிகாரி எம் ஜீ அபேரத்ன

35 வயதிற்கு மேல்

-முதலாமிடம் :– சார்ஜன் டிஎம்ஆர் திசாநாயகக் இலங்கை இலேசாயுத காலாட் படையணி

-இரண்டாமிடம் :– கோப்ரல் ஆர்யுஎம் ராஜபக்ஷ இலங்கை இலேசாயுத காலாட் படையணி

45 வயதிற்கு மேல்

-முதலாமிடம் – கெப்டன் ஜே ஏ கருணாரத்ன யுஎஸ்பீ விஜயபாகு காலாட் படையணி

-இரண்டாமிடம் – மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ

50 வயதிற்கு மேல்

-முதலாமிடம் :– மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ

-இரண்டாமிடம் :– கெப்டன் டப்ளியு ஏ சில்வா கஜபா படையணி

ஆண்கள் புதியவர்கள் குழு

-முதலாமிடம் :– இராணுவ பீரங்கி படையணி

-இரண்டாமிடம் :– இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி