Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th November 2024 17:41:50 Hours

இராணுவ படையணிகளுக்கிடையிலான முய் தாய் போட்டியில் விஜயபாகு காலாட் படையணி வெற்றி

இராணுவ முய்தாய் கழகத்தின் ஏற்பாட்டில் இராணுவ படையணிகளுக்கிடையிலான முய் தாய் போட்டி - 2024 பனாகொடை இராணுவ குத்துச்சண்டை உள்ளக விளையாட்டரங்கில் 2024 நவம்பர் 10ம் திகதி 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 167 வீர வீராங்கனைகளின் பங்குபற்றலுடன் நடைப்பெற்றது.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற முய் தாய் ஆண்களுக்கான போட்டியில் விஜயபாகு காலாட் படையணி 08 தங்கப் பதக்கங்கள் 05 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களை வென்று தொடர்ச்சியாக 3 வது தடவையாக வெற்றி பெற்றது. கஜபா படையணி 04 தங்கப் பதக்கங்களையும், 04 வெள்ளிப் பதக்கங்களையும், 08 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று இரண்டாம் இடத்தையும், மூன்றாம் இடத்தை இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி ஆகியன பகிர்ந்து கொண்டன.

பெண்கள் பிரிவில் தமது திறமைகளை வெளிபடுத்தி இலங்கை மகளிர் படையணி அணி வெற்றி பெற்றது.

இப்போட்டி நிகழச்சியில் பிரதம அதிதியாக இராணுவ பயிற்சி பணிப்பக பணிப்பாளரும் இராணுவ முய் தாய் குழுவின் தலைவருமான பிரிகேடியர் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டு வெற்றி கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.