28th September 2024 18:34:22 Hours
எம்பிலிபிட்டிய சந்திரிக்கா குளத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அன்று நடைபெற்ற இராணுவ படையணிகளுக்கு இடையிலான முப்போட்டியில் இலங்கை பீரங்கி படையணி வெற்றியீட்டியது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 12 படையணிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
750 மீ நீச்சல் போட்டி, 20 கிமீ சைக்கிள் ஓட்டம் மற்றும் 5 கிமீ ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த முப்போட்டியானது இராணுவ தடகள விளையாட்டுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் இராணுவ தடகள குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விளையாட்டுத் துறையில் எதிர்கால சவால்களை முறியடிக்க இராணுவ விளையாட்டு வீரர்களின் வலுவான குழுவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த நிகழ்வு.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவ தடகள விளையாட்டுக் குழுவின் தலைவரும் இலங்கை மருத்துவ படையணியின் படைத் தளபதியும், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் .கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களை இராணுவ தடகள விளையாட்டுக் குழுவின் செயலாளர் மேஜர் எம்.ஜே. சல்காது அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.
அனைத்து போட்டியிலும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை பீரங்கி படையணி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக்கொண்டது.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி போட்டித்தன்மை வாய்ந்த நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
குறிப்பிடத்தக்க தனி நபர் திறன்கள் பின்வருமாறு:
ஆண்கள் புதியவர்கள்
1ம் இடம் – கோப்ரல் ஆர்.என்.பீ விஜேசூரிய - இலங்கை பீரங்கி படையணி (1:06:52)
2ம் இடம் – சிப்பாய் கே.டி.எஸ்.எல் கெலும் குமார – விஜயபாகு காலாட் படையணி (1:07:03)
3ம் இடம் - லான்ஸ் பொம்பார்டியர் ஈ.டபிள்யூ.ஜே கருணாரத்ன - இலங்கை பீரங்கி படையணி (1:07:3)
ஆண் சாம்பியன்கள்
1ம் இடம் - லான்ஸ் கோப்ரல் எம்.பீ.எஸ்.ஆர் பிரியதர்ஷன - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி (1:04:34)
2ம் இடம் – கோப்ரல் எம்.பி.ஏ சந்திரசிறி - இலங்கை இராணுவ போர் கருவி படையணி (1:07:03)
3ம் இடம் - கன்னர் ஆர்.எம்.என்.எச் சுசிறிபால – இலங்கை பீரங்கி படையணி (1:07:3)
பெண் சாம்பியன்
லான்ஸ் கோப்ரல் எச்.கே.ஐ.டி உதயகுமாரி – இலங்கை இராணுவ மகளிர் படையணி (1:21:40)