Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th February 2023 21:36:35 Hours

இராணுவ நீச்சல் வீரர்கள் இரண்டு மைல் தூர நீச்சல் சாம்பியன்ஷிப்பில் பிரகாசிப்பு

அம்பலாங்கொடை தர்மசோக கல்லூரியின் ஏற்பாட்டில் 48 வது வருடாந்த 02 மைல் கடல் நீச்சல் சம்பியன்ஷிப் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 19) அம்பலாங்கொடை கரையோரப் பகுதியில் ஆரம்பமாகியதுடன் இராணுவ அணியும் மருதானை புனித ஜோசப் கல்லூரி அணியும் இணைச் சம்பியன் பட்டத்தினை பெற்றனர்.

இந்நிகழ்வில் 30 பாடசாலை அணிகள் மற்றும் நீச்சல் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 300 இற்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் போட்டியிட்டதுடன், இராணுவ நீச்சல் அணியைச் சேர்ந்த 11 வீரர்கள் இந்நிகழ்வில் ஆண்களுக்கான தங்கப்பதக்கம் உட்பட குறிப்பிடத்தக்க இடங்களை பெற்றுக்கொண்டனர். இராணுவ அணியும் புனித ஜோசப் கல்லூரி அணியும் 78 சம புள்ளிகளைப் பெற்று ஆண்களுக்கான சம்பியன்ஷிப் கிண்ணத்தையும், பாதுகாப்பு சேவைகள் கிண்ணத்தையும் பகிர்ந்துகொண்டதுடன் அம்பலாங்கொட தேவானந்த கல்லூரி அணி 22 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

நிகழ்வின் போது இராணுவ அணியின் பின்வரும் வீரர்கள் சிறப்பான தனிப்பட்ட திறன்களை வெளிப்படுத்தினர்.

ஆண்கள் அணி

முதலாம் இடம் - லான்ஸ் கோப்ரல் பி.டி ஷெஹான் – 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

09 ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் எ.எம்.எ.எஸ் அபேசிங்க – 3 வது இலங்கை கவச வாகன படையணி

11 ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஆர்.பி.டி நிரோஷன – 1 வது இலங்கை பொலிஸ் படையணி

12 ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் டி.எச்.கே.எஸ்.ஐ டி சில்வா – 6 வது இலங்கை சிங்க படையணி

13 ஆம் இடம் - சிப்பாய் I.M ஐ.எம் அபெரத்ன 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

15 ஆம் இடம் - சிப்பாய் R.G.A ஆர்.ஜி.எ கருணாநாயக்க - 1 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

16 ஆம் இடம் - சார்ஜென்ட் டபிள்யூ விமல் குமார - 3 வது இலங்கை இராணுவ சேவை படையணி

17 ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.பி.எம்.எல் அபேரத்ன - 2 வது (தொ) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

19 ஆம் இடம் - பணிநிலை சார்ஜன் டி.எம்.சி.எல். ஜெயசிங்க – 3 வது இலங்கை பொலிஸ் படையணி

21 ஆம் இடம் - லான்ஸ் கோப்ரல் H.G.R.S.S எச்.ஜி.ஆர்.எஸ்.எஸ் பத்திராஜா 7 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

பெண்கள் அணி

13 ஆம் இடம் - கோப்ரல் பீ.ஜி.சீ ஜினாதாரி - 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி