08th August 2023 21:29:15 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 143 வது காலாட் பிரிகேட்டின் முதலாவது தேசிய பாதுகாவலர் படையணி சிப்பாய்களின் மேலும் ஒரு நலன்புரி திட்டத்தின் கீழ் 143 வது காலாட் பிரிகேட்டிற்கு உட்பட்ட குருநாகல் மாவட்டத்தின் சியம்பலாவ ஆரம்ப பாடசாலையின் 24 மாணவர்களுக்கும், கல்லேகொட ஆரம்பப் பாடசாலையின் 13 மாணவர்களுக்கும் அவர்களது பாடசாலைகளுக்குச் சென்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) உபகரணங்களை விநியோகித்தனர்.
வாரியபொல மற்றும் குளியாப்பிட்டிய சனச அபிவிருத்தி வங்கி மற்றும் குருநாகல் நியூ பார்மசி (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் அனுசரணையில் ரூ150,000/= ஒருங்கிணைக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் படையினரால் வழங்கப்பட்டன.
முதலாவது தேசிய பாதுகாவலர் படையணியின் அதிகாரிகள், சிப்பாய்கள், சனச அபிவிருத்தி வங்கி மற்றும் நியூ பார்மசி பிரைவேட் லிமிடெட் அதிகாரிகள், மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் நிகழ்வுகளில் பங்கேற்றனர். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 143 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் திட்டத்திற்கு அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆசிகளையும் வழங்கினர்.