Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2021 15:00:16 Hours

இராணுவ தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வறிய குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கல்

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவையொட்டி சுதந்திபுரம் திரு ராகன் தம்பிராசா எனும் வறிய குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு புதன்கிழமை 13 ம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய அவர்களால் கையளிக்கப்பட்டது.

681 வது பிரிகேட் மற்றும் 9 வது இலங்கை தேசிய காவலர் படையணி படையினரின் நிதி மற்றும் மனித வளத்தினால் 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டது.

தேவிபுரம் திருமதி ஆர். குகனேஸ்வரிக்காக அரச வீட்டுத் திட்டத்தின் கீழ் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக சமூக நலத் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு வீடு புதன்கிழமை 13 ம் திகதி வைபவ ரீதியாக பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.

68 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டாரவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த குடும்பத்தின் வறுமை நிலை படையினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து 681 வது பிரிகேட் தளபதியுடன் ஆலோசித்து 9 வது இலங்கை தேசிய காவலர் படையணி மற்றும் 18 வது விஜயபாகு கலாட் படையினர் இக்கட்டுமான பணிகளை முன்னெடுத்தனர்.

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள், கிராமசேவையாளர் , பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளியின் உறவினர்கள் வீடு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.