15th August 2023 23:55:20 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 14) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் தங்கியிருந்த நோயாளிகளைச் சந்தித்து, அவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டு அவர்களின் நலம் விசாரித்தனர்.
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்குதல் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுமார் 800 நோயாளர்களுக்கு ஆரோக்கியமான மதிய உணவு வழங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சமூகம் சார்ந்த நலன்புரி திட்டமாக இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஜானகி லியனகேவின் கருத்திற்கமைய மேற்கொள்ளப்பட்டது.
முதலில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து அந்த நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கி அதன் பின்னர் மருந்துப் பொருட்களை மருத்துவமனை அதிகாரிகளிடம் கையளித்தனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் என் மஹாவிதான கேஎஸ்பீ மற்றும் பல அதிகாரிகள் இந் நிகழ்ச்சியின் போது கலந்து கொண்டனர்.