Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2023 14:07:01 Hours

இராணுவ தளபதியால் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்

கல்வி மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நிமித்தம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால், ஆதிகாரவாணையற்ற அதிகாரி மற்றும் சிவில் ஊழியரின் திறமையான இரு பிள்ளைகளுக்கு மடிக் கணினிகள் செவ்வாய்க்கிழமை (மே 23) வழங்கப்பட்டன.

ஆதிகாரவாணையற்ற அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்ட இந்த தாராள மனப்பான்மை, கல்வி வெற்றிக்கு தேவையான கருவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களால் தேசத்திற்கு பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.

இராணுவத்தின் வைத்திய ஓய்வில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் ஒருவரின் மகள் மற்றும் சிவில் ஊழியரின் மகன் ஆகிய இருவரும் இத் திட்டத்தில் பயன்பெற்றனர்.

மருத்துவ ரீதியாக ஓய்வில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் ஒருவரின் மகள் கற்றலில் தேர்ச்சி பெற்று தனது கல்வியில் சிறந்து விளங்கி பல சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். இவரது தந்தை லான்ஸ் கோப்ரல் கேசிடி கிரிகம கஜபா படையணியை சேர்ந்த இலங்கை இராணுவத்தின் போர் வீரர் ஆவார் , 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த போரின் போது தாய்நாட்டிற்கு தன்னலமின்றி சேவையாற்றி, போர்க்களத்தில் படுகாயமடைந்தார். இப் போர் வீரர் முன்வைத்த கோரிக்கைக்கு இராணுவத் தளபதியின் விரைவான நடவடிக்கையில் இம் மாணவி தற்போது தேவையான தொழில்நுட்ப வளங்களுடன் தனது உயர்கல்வியை ஆரம்பித்துள்ளார்.

இராணுவ தளபதி செயலகத்தில் சிவில் ஊழியராக கடமையாற்றும் திருகேஏஎன் சரத் குமார, பொறுப்புக்களை அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்காகவும் அவரது மகன், தனது அபாரமான ஆற்றலை வெளிப்படுத்தி, 2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து, தனது இடைநிலைக் கல்விக்காக கொழும்பு ஆனந்த கல்லூரியில் சேரும் வாய்ப்பை பெற்றார். இந்த சிறுவனின் சாதனை, சிறந்த முறையில் படிப்பைத் தொடர்வற்கு ஊக்கமளிக்கும் வகையில், ஒரு மடிக்கணினி வழங்கப்பட்டது, மேலும் தொடர்ச்சியான கற்றல் அனுபவத்திற்குத் தேவையான தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி, கல்வித் தொடர்பைத் தடையின்றித் தொடரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு வருகை தந்த அந்த மாணவர்களின், திறமையைப் பாராட்டி, இருவருக்கும் கற்றலுக்காக இரண்டு மடிக்கணினிகள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் படிப்பின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இம் மாணவர்களின் கல்வி சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதன் மூலம் மிகவும் சமத்துவமான சமூகத்திற்கான தொலைநோக்கு தொடர்பாக தளபதி எடுத்துக்காட்டினார்.