கட்டான, பொலகலவில் அமைந்துள்ள முப்படை வீரர்களுக்கான புனரமைக்கப்பட்ட இல்லத்தில் பல வசதிகளைக் கொண்ட கட்டிடம் இன்று (20) முற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களுடன், முன்னாள் படைவீரர் சங்க உறுப்பினர்கள் இணைந்து திறந்து வைத்தனர்.
7 வது (தொ) இலங்கை பொறியியல் படையினர்களின் ஆதரவுடன், முன்னாள் படைவீரர்களின் பழங்கால கட்டிடக்கலையுடன் பிரதான கட்டிடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு, விசாலமான சமையலறை, உணவு விடுதி, உடற்பயிற்சி கூடம் மற்றும் மருத்துவ பரிசோதனை அறைகளையும் அமைத்தனர்.
1940, 50 கள், மற்றும் 60களில் முன்னாள் போர்வீரர்கள் ஆற்றிய சேவைகளை கருத்தில் கொண்டு படைவீரர் இல்லத்தில் உள்ள தேவைகள் குறித்து தெரிவிக்கப்பட்டதையடுத்து, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் தேவையான நிதியை ஒதுக்கி, இத் திட்டத்திற்கு உடனடியாக தனது ஆதரவை வழங்கினார்.
7 வது (தொ) இலங்கை பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி தனது படையினருடன் இத்திட்டத்திற்கு முழுமையாக பங்களித்தார். புதுப்பிக்கப்பட்ட கட்டிடம், அதே வளாகத்தில் கட்டப்பட்ட மேலும் நான்கு தனித்தனி புதிய அறைகளைத் திறக்க அன்றைய பிரதம விருந்தினர் அழைக்கப்பட்டார்.
22 முப்படை வீரர்கள் அடங்கிய குழு, தற்போது முப்படை வீரர்களுக்கான இந்த இல்லத்தில் தங்கியுள்ளதுடன், முப்படைத் தளபதிகள் மற்றும் பிற நலம் விரும்பிகளிடமிருந்து பெறப்பட்ட நிதியில் முன்னாள் படைவீரர் சங்கத்தால் இது பராமரிக்கப்பட்டு வருகின்றது.
பொது மண்டபத்தில் நடைபெற்ற சுருக்கமான வைபவத்தின் முடிவில், முன்னாள் படைவீரர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அங்கு வசிக்கும் படைவீரர்களுடன் தளபதி அவர்கள் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அமைப்பாளர்களின் அழைப்பின் பேரில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் கையெழுத்திட்டு நினைவுகளை விட்டுச் சென்றார்.
தளபதி வெளியேறுவதற்கு முன்னர், முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் (ஓய்வு) கே.ஏ.ஞானவீர அவர்கள் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னத்தை வழங்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நீர்கொழும்பு மீன்பிடி நகரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் கட்டானாவின் போகல என்ற இடத்தில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள படைவீரர் இல்லம் 1850 களின் பிற்பகுதியின் பாரம்பரிய மற்றும் கட்டிடக்கலை நிறைந்த பழமையான வீடு என்பதால் முன்னோர்களின் மதிப்புகளை நினைவூட்டுகிறது.
அங்கு வருகை தந்த தளபதியை வாழ்த்துவதற்காக முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் (ஓய்வு) கே.ஏ.ஞானவீர அங்கு வந்திருந்தார். முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பிற்காக தளபதி பாராட்டினார்.
அந்த முன்னாள் படைவீரர்கள், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் சுதந்திரத்திற்கு முன்னர் நாட்டின் சில முக்கியமான கட்டங்களில் வெவ்வேறு முக்கிய பாத்திரங்களை வகித்துள்ளனர் மற்றும் அவர்களில் சிலர் பிரிட்டிஷ் காலத்தின் அப்போதைய இலங்கை இராணுவத்தில் துப்பாக்கி வீரர்களாகவும், பொறியியலாளர்களாகவும் பணியாற்றிய பாக்கியம் பெற்றவர்கள். காலாட்படை வீரர்கள், கன்னர்கள், கடற்படை வீரர்கள், விமான படை வீரர்கள் , அவர்கள் ஓய்வு பெறுவதற்கு முன் அல்லது பணியிலிருந்து விடுபடுவதற்கு முன்பு அதிகாரிகள்.