02nd August 2024 21:20:04 Hours
இராணுவ தலைமையகத்தில் அதிகாரிகளுக்கான கொள்முதல் செயல்முறை தொடர்பான இரண்டு நாள் பட்டறை2024 ஜூலை 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது. இத் திட்டம் பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்எஎன்டி எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பயிற்சிபணிப்பகத்துடன்இணைந்து போர்கருவி பாடசாலையால்நடத்தப்பட்டது.
பட்டறை ஆரம்ப உரையுடன்இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் நிகழ்வைஆரம்பித்து வைத்தார். இப்பட்றையில்கொள்முதல் செயல்முறை அறிமுகம், விலை மனுகோரல் அழைப்பு அறிவிப்புகள், ஏல ஆவணங்கள், விலை மனுகோரல் வழிகாட்டுதல்கள், ஏலதாரர்களின் மதிப்பீடு மற்றும் இ-ஜிபி அறிமுகம் போன்ற தலைப்புகளில் இடம்பெற்றன. கொள்முதல் நடைமுறைகள் குறித்த அதிகாரிகளின் புரிதலை மேம்படுத்துதல் மற்றும் விலை மனுகோரல்கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த பட்டறை நோக்கமாக கொண்டிருந்தது.