Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th February 2023 19:51:55 Hours

இராணுவ ஜூடோ வீரர்கள் 12 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுகளில் சாம்பியன்

பெப்ரவரி 7 முதல் 10 வரை நான்கு நாட்கள் பனாகொட இராணுவ உடற் பயிற்சி பாடசாலை உள்ளக அரங்கில் நடைபெற்ற 12 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகளின் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இராணுவ ஆண் மற்றும் பெண் ஜூடோ வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றனர்.

இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஜூடோ அணிகளின் ஆண்கள் மற்றும் பெண்களின் 84 ஜூடோ வீரர்கள் பங்கேற்ற இந்த சாம்பியன்ஷிப் போட்டி இலங்கை இராணுவ ஜூடோ குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை விமானப்படை அணி இரண்டாம் இடத்தைப் வென்றது.

வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 10) நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவில் இலங்கை ஜூடோ குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.