04th January 2024 19:25:17 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணி படையினரால் தோழமை மற்றும் நல்லெண்ணத்தின் பிணைப்பை வளர்க்கும் நோக்கத்தில் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டது. இந்த நிகழ்வானது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியும் போர் கருவி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏகே ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக, 02, 03, மற்றும் 17 டிசம்பர் 2023 ஆகிய திகதிகளில் 3, 4 மற்றும் 8 வது இலங்கை இராணுவ சேவைப் படையணிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் உள்ளடக்கியிருந்தன.