Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th April 2023 21:25:30 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி 4 வது இராணுவ சேவை படையணியின் புதிய யோகட் தயாரிப்பு நிலையம் திறந்து வைப்பு

ஹிங்குராங்கொடவில் அமைந்துள்ள 4 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியானது இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் புதிய யோகட் தயாரிப்பு நிலையத்தினை திங்கட்கிழமை (ஏப்ரல் 03) இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர அவர்கள் அன்றைய பிரதம அதிதியை அன்புடன் வரவேற்றதுடன் புதிய யோகட் தயாரிப்பு நிலையத்தினை திறந்து வைப்பதற்கு முன்னர் பதாகையை திரைநீக்கம் செய்து நாடா வெட்டும்படி அழைத்தார்.

பின்னர், அனைத்து அழைப்பாளர்களும் பாரம்பரிய மங்கள விளக்கு ஏற்றி புதிய யோகட் தயாரிப்பு நிலையத்தினை ஆய்வு செய்து படையினரின் நுகர்வுக்கான யோகட் உற்பத்தி மற்றும் வெளியாட்களுக்கு விற்பனை செய்வது பற்றி அறிந்து கொண்டனர். இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி இந்நாளிக்கான நினைவுகளைச் சேர்த்தார்.

படையினரின் முயற்சியினை மேம்படுத்த திருமதி ஜானகி லியனகே அவர்கள் இத் திட்டத்திற்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவின் நிதி மூலம் ரூபா 1.4 மில்லியன் வழங்கினார். பின்னர் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அந்நாளின் நினைவாக குழு படம் எடுத்துக் கொண்டனர். புதிய அலகு தினசரி மொத்தம் 850 யோகட் கோப்பைகளை உற்பத்தி செய்யவும் மற்றும் இராணுவ உறுப்பினர்களின் நலன்புரி திட்டங்களுக்கு நிதியை உருவாக்குவதற்காக வெளி சந்தைகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த படையினர் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் படையினர் கலந்து கொண்டனர்.