20th March 2024 16:56:31 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் 19 மார்ச் 2024 ம் திகதி லெஸ்லி ரணகல மாவத்தையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் முதியோர்களை சந்தித்ததுடன் அவர்களுக்கு இரவு உணவும் வழங்கினர்.
நிகழ்வின் முடிவில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி முதியோர்களுக்கு மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளை வழங்கினார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஸ்ட உறுப்பினர்கள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.