10th January 2024 19:30:51 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, விரிவான ஆசிரியர் பயிற்சிப் பட்டறை 2024 ஜனவரி 09 அன்று, இலங்கை இலேசாயுத காலாட் படையணி விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் அமைந்துள்ள எட்டு விருகெகுலு பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு வலுவூட்டுவதுடன், பாலர்களின் கல்வி அபிவிருத்திற்கு தேவையான திறன்களையும் அறிவையும் அவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த பட்டறை நடாத்தப்பட்டது.
திருமதி லியனகே அவர்களை பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவர் சம்பிரதாய தாம்பூலம் வழங்கி அன்புடன் வரவேற்றார். இராணுவ கலாசார நடனக் குழுக்களின் வரவேற்புடன் அவர் விரிவுரை மண்டபத்திற்குச் அழைத்துசெல்லப்பட்டார்.பின்னர் மங்கள விளக்கேற்றி இலங்கை இராணுவ சேவை வனிதையர் கீதம் இசைத்தலுடன் செயலமர்வு ஆரம்பமானது. பின்னர் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக வீரத்துடன் உயிர் தியாகம் செய்த வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இக்கே - வீ அமைப்பின் தலைவியும் அவுஸ்திரேலியாவின் காலநிலை மாற்றம் மற்றும் சமாதாதன பயணம் மற்றும் இந்தியாவின் எடிபிள் ரூட்ஸ் அமைப்பின் இணை இஸ்தாபகருமான திருமதி காஞ்சனா தில்ருக்ஷி குமாரி வீரகோன் அவர்களால் ஆரம்ப உரை ஆற்றப்பட்டது. மேலும் அவரது மதிப்புமிக்க பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.