Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd January 2024 19:42:32 Hours

இராணுவ சேவை வனிதையரினால் இராணுவம் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 100 உலர் உணவு பொதிகள்

இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணிபுரியும் இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகளை 2024 ஜனவரி 19 அன்று வன்னி பாதுகாப்பு படை தலைமையக கேட்போர் கூடத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் தலைமையில் வழங்கினர்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி நெலுகா நானயக்கார அவர்கள் திருமதி ஜானகி லியனகே அவர்களை அன்புடன் வரவேற்றார். திருமதி ஜானகி லியனகே அவர்கள் அந்த நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு விநியோகித்தார். இண்டஸ்ட்ரியல் சேப்டி இக்யூப்மென்ட் (பிரைவேட்) லிமிடெடின் அனுசரணையின் மூலம் இந் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சி நிரலின் நிறைவில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி இண்டஸ்ட்ரியல் சேப்டி இக்யூப்மென்ட் (பிரைவேட்) லிமிடெட் பணிப்பாளருக்கு இந்த உன்னதமான நோக்கத்தை நனவாக்குவதில் அவர்களின் முக்கிய பங்கை பாராட்டி சிறப்பு நினைவுப் பரிசை வழங்கினார். தொடர்ந்து வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்கள் நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், இண்டஸ்ட்ரியல் சேப்டி இக்யூப்மென்ட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.