Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th November 2023 10:48:55 Hours

இராணுவ சேவை வனிதையரால் மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கல்

இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் தெரிவு செய்யப்பட்ட மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 100 உலர் உணவு பொதிகளை நவம்பர் 22 ஆம் திகதி தியத்தலாவில் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி.ஜனாகி லியனகே தலைமையில் வழங்கப்பட்டது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் திருமதி ஹிமாஷா ஏகநாயக்க நியங்கொட அவர்கள் திருமதி ஜானகி லியனகே அவர்களை அன்புடன் வரவேற்றார். அதனை தொடர்ந்து திருமதி ஜானகி லியனகே அவர்களால் அந்த நிவாரண பொதிகள் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி, மத்திய முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, திருமதி ஹிமாஷா ஏக்கநாயக்க நியங்கொட, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.