Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2024 15:32:08 Hours

இராணுவ செயலாளர் கிளையினால் அதிகாரி தொழிற்துறை திட்டமிடல் தொடர்பான பட்டறை

படையணிகளில் உள்ள அதிகாரிகளின் தொழிற்துறை திட்டமிடல் பிரிவின் பணி நிலை அதிகாரிகளை பயிற்றுவிக்கும் நோக்கில் இராணுவ செயலாளர் கிளை ஒரு நாள் பட்டறையை 29 பெப்ரவரி 2024 ம் திகதி ஏற்பாடு செய்தது. பல்வேறு படையணிகளை சேர்ந்த 44 பணி நிலை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த பட்டறையில் இராணுவ செயலாளர் கிளையின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இப்பட்டறையின் முதன்மை நோக்கம் அதிகாரி தொழிற்துறை திட்டமிடல் மற்றும் முகாமை, தற்போதைய அளவுகோல்கள் மற்றும் கொள்கைகள் பற்றிய புரிதல் மற்றும் அறிவை மேம்படுத்துதல் போன்றவை ஊடாக படையணி அதிகாரிகளுக்கு பயனுள்ள தொழில் முகாமையை உறுதி செய்வதாகும்.