20th February 2025 14:10:41 Hours
இராணுவ காற்பந்து குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட படையணிகளுக்கிடையிலான ஆணிக்கு ஏழு பேர் கொண்ட காற்பந்து போட்டி 2025, பனாகொடை காற்பந்து மைதானத்தில் 11 படையணிகளின் பங்கேற்புடன் இராணுவ காற்பந்து குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் கே.ஏ.யு கொடிதுவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 பெப்ரவரி 14 அனறு நிறைவடைந்தது.
இறுதி போட்டியின் போது, இராணுவ புலனாய்வு படையணி காற்பந்து அணி சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் விஜயபாகு காலாட் படையணி காற்பந்து அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.