15th June 2023 23:03:52 Hours
வீடற்ற ஏழைக் குடும்பத்திற்கு 65 வது காலாட் படைபிரிவின் 651 வது காலாட் பிரிகேட்டின் 17 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினர் பல நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் வெள்ளாங்குளம் தேவம்பிட்டியில் புதிய வீடொன்றை நிர்மாணித்து அதனை சனிக்கிழமை (10) பயனாளிக்கு வழங்கினர்.
தேவம்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் திரு எமில் பொமிக்கோ ஜெபநேசன் ரோச் தனது மனைவி மற்றும் சிறிய மகனுடன் பொருளாதாரச் சிரமங்களுக்கு உள்ளாகி, முறையான தங்குமிடமின்றி வாழ்வதை அப்பகுதியில் சேவையாற்றும் படையினர் அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் 65 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆஏடிபீ எதிரிசிங்க பீஸ்சி மற்றும் 651 வது காலாட் பிரிகேட் தளபதி கர்னல் எஸ் விஜேசிறிவர்தன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டதன் பலனாக இது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வணிகர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடம் புதிய வீடு கட்டுவதற்கான பொருட்கள் பெறப்பட்டன.
அதன்படி, 651 வது காலாட் பிரிகேட்டின் 17 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினர் தமது பொறியியல் தொழில்நுட்பங்கள் மற்றும் மனிதவளத்தை பயன்படுத்தி ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர்.
சனிக்கிழமை (10) மேஜர் ஜெனரல் ஆஏடிபீ எதிரிசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு பதாகை திரைநீக்கம் செய்து புதிய வீட்டின் சாவியை சோல்மன் ராஜ் அருள் மரியசதுஜா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பல பாரம்பரிய நிகழ்வுகளின் பின்னர் கையளித்தார்.