23rd May 2023 18:04:40 Hours
இலங்கை இராணுவத்தின் எல்லை அணியினர், சனிக்கிழமை 20 மே 2023 பங்கதெனிய, கருக்குளிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 'பிரவீன் சவால் கிண்ணம்' எல்லை போட்டியில் வெற்றிபெற்றனர்.
இலங்கை இராணுவ எல்லை அணியின் வென்னப்புவ பசிலிகா விளையாட்டுக் கழக எல்லை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றியடைந்து, பங்ககிரிய சேலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக எல்லை அணியுடனான இறுதிப் போட்டியில் போட்டியிட்டனர்.
இலங்கை இராணுவ எல்லை அணி பங்ககிரிய விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் 16 ஓட்டங்களைப் பெற்றது. பங்ககிரிய சேலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக எல்லை அணியால் 9 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இறுதிப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருந்தை கோப்ரல் எஸ்டி பிரியஷாந்த வென்றதுடன், போட்டியின் நாயகன் பரிசு சிப்பாய் டபிள்யூசிசி மதுசங்கவுக்கு வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ எல்லை அணியின் குழுப்பணியானது போட்டி முழுவதிலும் சிறப்பாக இருந்ததுடன், பிரவீன் சவால் கிண்ண எல்லை போட்டியில் அவர்கள் பெற்ற வெற்றியானது அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பிற்கும் சான்றாகும்.