Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2024 18:54:14 Hours

இராணுவ ஊடக பிரிவினருக்கு வில்லையற்ற கெமரா மற்றும் வீடியோ தொழில்நுட்பம் தொடர்பான பட்டறை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தினரால் 21 பெப்ரவரி 2024 அன்று பனாகொட இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் வில்லையற்ற கெமரா மற்றும் வீடியோ தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வு நடாத்தப்பட்டது.

இந்த செயலமர்வானது மெட்ரோபொலிட்டன் (Metropolitan) தொழில்நுட்ப தனியார் நிறுவனத்துடன் இணைந்து வில்லையற்ற கெமரா மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சமீபத்திய அறிவு மற்றும் நடைமுறை திறன்களை வழங்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஊடகங்களுடன் தொடர்புடைய பல்வேறு படையணிகளை சேர்ந்த 35 வீரர்கள் கலந்துக்கொண்டனர். கெமரா தொழில்நுட்பம், வீடியோ கெமரா தொழில்நுட்பம் ஆகியவற்றின் தத்துவார்த்த அம்சங்களை உள்ளடகிய கெமரா கையாளுதல் தொடர்பான விரிவான நடைமுறை அனுபவத்துடன் செயலமர்வு நடாத்தப்பட்டது. இந்த அமர்வானது படையினருக்கு அவர்களின் நுட்பங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்குவதாகும்.

ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக குமார அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு செயலமர்வை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களை வழங்கியதுடன் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

திரு. பிரவீன் சமரக்கோன், திரு.பிரசங்கர ரத்நாயக்க்க. திரு. ரொஷான் பெர்னாண்டோ மற்றும் மெட்ரோபொலிட்டன் (Metropolitan) தொழில்நுட்ப தனியார் நிறுவனத்தின் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்கள் விரிவுரைகள் மற்றும் நடைமுறை அமர்வை நடத்தினர்.

சமிக்ஞை படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எஸ்ஜேகேடி ஜயவர்தன யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் மெட்ரோபொலிட்டன் (Metropolitan) தொழில்நுட்ப தனியார் நிறுவன பிரதிநிதிகள், மெட்ரோபொலிட்டன் (Metropolitan) தொழில்நுட்ப தனியார் நிறுவன பணிப்பாளர் திரு. தஸ்லிம் ரஹ்மான், பொது முகாமையாளர் சுரேஷ் ஹேரத், சில்லறை வர்த்தகத் துறையின் பிரதித் தலைவர் திரு. பிரவீன் சமரகோன் மற்றும் கேள்விமனு உதவி முகாமையாளர் திருமதி நதீகா டி பொன்சேக்கா, திரு. பிரசங்க ரத்நாயக்க மற்றும் மெட்ரோபொலிட்டன் (Metropolitan) தொழில்நுட்ப தனியார் நிறுவன பணியாளர்கள் ஆகியோரும் இந்த செயலமர்வில் பங்குபற்றினர்.