20th October 2023 07:45:38 Hours
இலங்கை பொறியியல் படையணியின் 14 வது இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொறியியல் படையணி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பொரலஸ்கமுவ ஏரியில் ஒரு மாத காலப்பகுதியில் (11 செப்டெம்பர்-12 ஒக்டோபர்) நீர்த்தாவரங்கள், மாசுக்கள் மற்றும் பல்வேறு நீர் மாசுப்படுத்தபடுபவை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதில் உள்ள மாசுக்களை அகற்ற தனது தொழில்நுட்ப உதவியை வழங்கியது.
பொறியியல் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ, தலைமை களப்பொறியலாளர் மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி மற்றும் பொறியியல் பிரிகேட் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோர் இத்திட்டத்திற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.
14 வது இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொறியியல் அனர்த்த பாதுகாப்பு படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிஎம்பீகே பெல்லிகஹவத்த ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் இத்திட்டத்தினை மேற்பார்வையிட்டதுடன் 14 வது இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொறியியல் அனர்த்த பாதுகாப்பு படையணி இத்திட்டத்தினை முன்னெடுத்தது.
இந்த ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்ற மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்கும் பங்களித்த படையினரை பொரலஸ்கமுவ பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர் பாராட்டினார்.
இராணுவத் தளபதி மற்றும் இலங்கை பொறியியலாளர்களின் சிறப்பான ஆதரவு மற்றும் விலைமதிப்பற்ற சேவைகளுக்காக நீர்ப்பாசன பொறியியலாளர்களால் விசேட நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.