07th December 2024 06:42:14 Hours
தம்புள்ளை பொது மருத்துவமனையின் பிரதம மருத்துவ அதிகாரியின் வேண்டுகோளிற்கு இணங்க, இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சீகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயந்திரவியல் காலாட் படையணி படையினர் வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவை சீரமைக்க உதவி வழங்கினர்.
இத்திட்டம் 2 டிசம்பர் 2024 அன்று முடிக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது பல தொண்டு நிறுவனங்கள் வார்டுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.